மக்களின் வருமானம் அதிகரிக்கும் போது அவர்கள் விலைவாசி உயர்வையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கலக்கம் அடைந்து இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மகேந்திர சிங் சிசோடியா போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது பெட்ரோல் டீசல் விலை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நமது வருமானம் அதிகரிக்கும் போது நாம் விலை உயர்வையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நடை முறை செயல்தான் என்று கூறினார். இவரது இந்த கருத்து மக்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.