Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பையில் இருந்து விலகல்…. வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் திடீர் முடிவு…. இதுதான் காரணமா….?

வங்கதேச அணியின் சீனியர் வீரரும் ஆல்ரவுண்டர் மான சஹீப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது இதில் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான சஹீப்  அல் ஹசன் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்மையில் ஷார்ஜாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வங்கதேச அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் அடுத்து பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |