விஷ வண்டு கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேடநத்தம் ரோடு பகுதியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகாவிஷ்ணு வீட்டின் அருகாமையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது விஷ வண்டு கடித்ததாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பின் மகாவிஷ்ணுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அவரின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகாவிஷ்ணு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.