பரத்பூர் மாவட்டத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜிதேந்திர சிங் கோலியா என்பவர் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் டென்னிஸ் விளையாட்டு அரங்கு ஒன்றில் அறிமுகமான 14 வயது சிறுவனை, நீதிபதியும் அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நீதிபதி ஜிதேந்திர சிங் கோலியா மீதும், அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறார் வன்கொடுமை தடுப்புச்சட்டமான போக்சோ சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புகாருக்கு ஆளான நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.