கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் திடீரென மரணம் அடைந்தது கன்னட திரையுலகை மட்டுமில்லாது, மற்ற திரையுலகினர் அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் புனித் ராஜ்குமார், தான் உயிருடன் இருக்கும் போது ஏராளமான உதவிகளை செய்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இரு கண்களையும் தானம் செய்திருந்தார். அதன்படி, தற்போது அவருடைய இரண்டு கண்களும் பெங்களூரூவில் இருக்கும் நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்படிருந்த நிலையில், அவரது கண்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4 நபர்களுக்கு பொருத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இறப்பதற்கு முன்னதாக செய்த உதவிகளோடு, அவர் மறைந்த பிறகும் செய்த நல்ல காரியம் அனைவரையும் மனம் உருக செய்துள்ளது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள், அவர் மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் செய்த நற்காரியங்களால் இன்னும் வாழ்ந்துவருகிறார் என உருக்கமாக பதிவிட்டு வருகிறார்கள்.