தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் கொரோணா பரவலை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஒலி மாசு ஏற்படுத்தும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி, மத வழிபாட்டுத் தலம் அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
Categories