தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில்,
சென்னை எழும்பூரில் நவம்பர் , 3 இரவு 10:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06037) மறுநாள் காலை 11:00 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் நவம்பர் 5 மதியம் 3:10 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில் (06038) மறுநாள் அதிகாலை 5:20 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும்.இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலியில் நின்று செல்லும்.
நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சென்னை மாம்பலத்திலும், சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில் அரியலுாரிலும் நிற்கும்.திருநெல்வேலியில் நவம்பர் , 7 இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06040) தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக மறுநாள் காலை 7:55 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இந்த ரயில் அம்பாசமுத்திரம், கீழ்க்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலுார், விழுப்புரம், செங்கலப்பட்டில் நின்று செல்லும்.தாம்பரத்தில் நவம்பர் , 8 மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06049) மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.