Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களே…. யாரும் பாடங்கள் நடத்த வேண்டாம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக பாடங்கள் நடத்துவதை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக,ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகளில் ஆய்வு செய்ததில் மாணவர்கள் உற்சாகமாக இருப்பதை காண முடிந்தது. அதனைப்போலவே திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உட்பட சில பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் அமைச்சர் கலந்துரையாடினார். ஒவ்வொரு வகுப்புக்கும் சென்ற அவர், மாணவர்களுக்கு நீதிக் கதைகளை கூறி மாணவர்களை பாட்டு பாட வைத்து ரசித்தார்.மேலும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார்.

Categories

Tech |