Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்குகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்த நிலையில் காலையில் இருந்து மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்று மொத்தம் எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |