ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு கடலுக்கடியில் நடந்த போட்டியில் நீச்சல் வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.
ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் உள்ளது. அங்குள்ள கடலுக்கு அடியில் பூசணிக்காயை செதுக்கி உருவங்கள் வரையும் போட்டியானது நடைபெற்றது. இதற்காக நீச்சல் வீரர்கள் முதுகில் கத்தி, பூசணிக்காய், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் அங்கு விமானம், ஆக்டோபஸ், காதல் உருவங்கள், ஜெல்லிபிஷ் போன்ற பல்வேறு உருவங்களை பூசணிக்காயில் செதுக்கியுள்ளனர். அதிலும் இந்த பூசணிக்காய் செதுக்கும் போட்டியில் சுறாமீன் வெளிப்படுவது போன்று செதுக்கிய டான் ஈட்ஸ்மோ என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.