Categories
உலக செய்திகள்

“ஒன்றரை வருடங்கள் கழித்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!”.. தாய்லாந்து அரசு அறிவிப்பு..!!

தாய்லாந்து நாட்டில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் தற்போது தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.   
கொரோனா பரவலால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் தாய்லாந்து நாடும் ஒன்று. சுற்றுலா துறையை அதிகமாக நம்பியிருக்கும் தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வருடந்தோறும் 4 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டிற்கு வருவதுண்டு.
ஆனால், கடந்த வருடம் கொரனோ பாதிப்பு ஏற்பட்டதால், தாய்லாந்து அரசு அதிக  கட்டுப்பாடுகளை விதித்தது. எனவே, சுற்றுலா பயணிகள் வருகை சுமார் 80% குறைந்துவிட்டது. இந்நிலையில், தற்போது அரசு, சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைபடுத்தப்பட்டிருந்த விதிமுறைகளை ஒன்றரை வருடங்கள் கழித்து நீக்கியிருக்கிறது.
எனவே, குறைவான பாதிப்புகள் கொண்ட 60-க்கும் அதிகமான நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், சுற்றுலா பயணிகள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயமாக செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், இரண்டு தவணை தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொண்ட சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டிற்கு வந்த பின் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |