பள்ளி ஆசிரியரிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பலவாணபுரம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தன்னை வங்கி மேலாளராக அறிமுகப்படுத்தி கொண்டார். இதனை அடுத்து அந்த மர்மநபர் சாந்தியின் வங்கி கணக்கின் விவரங்களையும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து சாந்தியின் வங்கிக்கணக்கில் இருந்து 5000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக அவரின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சாந்தி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நெல்லை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பணமோசடி செய்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.