கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து 20,000 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை வழக்கம்போல பூஜை செய்வதற்காக வந்த பூசாரி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் கோவில் நிர்வாகிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.