Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடருமா ….? வங்காளதேச அணியுடன் இன்று மோதல் ….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் தென்னாபிரிக்கா அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் பேட்டிங்கில்        டி காக், தெம்பா பவுமா, வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் மற்றும் மார்க்ராம்ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளன. அதேபோல் பந்துவீச்சிலும் பிரிட்டோரியஸ், அன்ரிச் நோர்டியா, காஜிசோ ரபடா, தப்ரைஸ் ஷம்சி மற்றும் கேஷவ் மகராஜ்  ஆகியோர் மிரட்டி வருகின்றனர்.இதையடுத்து வங்காளதேச அணி இலங்கை, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளிடம் தொடர் தோல்வியடைந்ததால் அரைஇறுதி வாய்ப்பை இழந்தது .

அதோடு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது .மேலும் அந்த அணி பேட்டிங் ,பவுலிங், மற்றும் பில்டிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது.இந்நிலையில் காயம் காரணமாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.இதில் 6 முறையும் தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது.இதனால் இன்றைய போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று மாலை 3.30  மணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது.

Categories

Tech |