ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவ மருத்துவமனைக்கு அருகில் இன்று தொடர்ந்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல், சில கிளர்ச்சியாளர்களின் குழுவும் தலிபான்களை எதிர்த்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காபூல் நகரில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு அருகில் இன்று தொடர்ந்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.