தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளில் ஆஸ்திரேலியா அரசு தளர்வுகளை அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 மாதங்களாக சர்வதேச விமான சேவைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவின் கோவாக்சின் மற்றும் சீனாவின் பிபிஐபிபீ-கோர்வி ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றி ஆஸ்திரேலியாவிற்கு நுழையலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக அந்த இரு நாட்டினுடைய தடுப்பூசிகளின் பாதுகாப்பு, தரம் போன்றவற்றை ஆய்வு செய்த பின்னரே ஆஸ்திரேலியா அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக கோவாக்சினை செலுத்திய 12 வயதுக்கு மேற்பட்டோரும் பிபிஐபிபீ-கோர்வி தடுப்பூசியை பெற்றுக் கொண்ட 18 முதல் 60 வயதுக்கு மேலானவர்களும் எந்தவித தடையுமின்றி பயணிக்கலாம் என்றும் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.