தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாக இருப்பதை வரவேற்கும் விதமாக திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்த ரஜினி ரசிகர் கர்ணன்.
இயக்குனர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தீபாவளி திருநாளில் வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்ணாத்தை படம் வெளியாவதை முன்னிட்டு திருச்சி ராம்ஜி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ரசிகர் கர்ணன் என்பவர் 30 ரூபாய் மதிப்புள்ள தோசையை இன்று ஒருநாள் மட்டும் 1 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளரும், ரஜினிகாந்த் ரசிகருமான கர்ணன் கூறுகையில், ஹோட்டலுக்கு தினமும் வரும் வாடிக்கையாளர்களை விட இன்று அதிகமாக மக்கள் வந்து இருக்கிறார்கள். அண்ணாத்த படத்தை நாங்க ரொம்ப எதிர்பார்க்கிறோம். ரஜினி இளமையாக இருக்காரு.. சிவா சார் ரொம்ப அருமையாக பண்ணியிருக்கிறார்.. இமான் இசை அருமையாக இருக்கிறது.. சன் பிக்சர் சூப்பர், இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கு.. உலகமே எதிர்பாக்குற அண்ணாத்த வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்..
மேலும் அவர் தீபாவளிக்கு அண்ணாத்த வெளியாவது மற்றும் மருத்துவமனையிலிருந்து ரஜினி குணமடைந்து வீடு திரும்பியதை கொண்டாடும் வகையில், இன்று ஒரு நாள் மட்டும் 1 ரூபாய்க்கு தோசை வழங்கப்படுவதாகவும், தீபாவளி அன்று உணவகம் விடுமுறை என்பதாலும், நாளை தீபாவளி பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் கவனமாக இருப்பதால் இன்று சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர் தெரிவித்துள்ளார்.
#அண்ணாத்த திரைப்படம் #Diwali அன்று வெளியாவதை முன்னிட்டு #Trichy மாவட்ட #ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளர் கர்ணன் தன் உணவகத்தில் இன்று ஒரு நாள் அண்ணாத்த தோசை என்கிற பெயரில் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்கிறார்.#அண்ணாத்த_தீபாவளி@rajinikanth pic.twitter.com/FvZ1QMBVId
— Mujahidul Islam (@Mujahidtry) November 2, 2021