Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திரும்பவும் வேண்டும்…. கட்சியினர் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

வன்னியர்கள் சங்கத்தின் சார்பாக கட்சியினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 10.5% இட ஒதுக்கீட்டை தற்போது ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை திரும்பவும் அமல்படுத்த வேண்டும்.

பின்னர் தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமாறு கூறி வன்னியர்கள் சங்கத்தின் சார்பாக பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாநில செயலாளர் எம்.கே.முரளி தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எல்.இளவழகன், மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இவற்றில் மாநில சமூக நீதிப் பேரவை துணைச் செயலாளர் ஜானகிராமன் உள்பட பலரும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |