Categories
தேனி மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெறும் வியாபாரம்… வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி… கடந்த ஆண்டை விட விலையுயர்வு…!!

தீபாவளி பண்டியையையொட்டி சந்தையில் ஆடு வியாபாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆடு, கோழி வியாபாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி நிலவுவதால் வெள்ளாடுகளின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 15 கிலோ எடை கொண்ட வெள்ளாடுகள் 9000 முதல் 10,000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெள்ளாடுகளின் விலை அதிகரித்தாலும் சில்லறை இறைச்சி வியாபாரத்தில் எந்தவித விலை உயர்வும் இருக்காது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |