Categories
சினிமா தமிழ் சினிமா

புதிதாக தொழில் தொடங்கிய பிக்பாஸ் வனிதா… குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் வனிதா புதிதாக தொழில் தொடங்கியுள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா . ஏற்கனவே இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சில மாதங்களிலேயே வனிதா, பீட்டர் பால் இருவரும் பிரிந்தனர். இதன்பின் வனிதா தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது இவர் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Vanitha Vijayakumar all set to tie knot - CINEMA - CINE NEWS | Kerala  Kaumudi Online

அதன்படி 2K அழகானது காதல், அந்தகன், அநீதி, பிக்கப் டிராப், அனல் காற்று போன்ற படங்களில் வனிதா நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா புதிதாக தொழில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆகியவை உள்ளடக்கிய கடையை புதிதாக திறந்துள்ளார். இதையடுத்து வனிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள்  தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |