நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தெலுங்கில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளியான நான் ஈ, ஜெர்ஸி, கேங் லீடர் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது விழாவில் ஜெர்ஸி படத்திற்கு சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=ZuQuOSPO51M&t=52s
தற்போது நானி இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மடோனா செபாஸ்டின், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஷியாம் சிங்கா ராய் படத்தின் அசத்தலான புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.