Categories
உலக செய்திகள்

“வீட்டில் உயிரிழந்து கிடந்த முதிய தம்பதி!”.. அருகில் கிடந்த ஆயுதம்.. சுவிட்சர்லாந்தில் பரபரப்பு..!!

ஸ்விட்சர்லாந்தில் ஒரு வில்லாவில் முதிய தம்பதியரின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் வாலாஸ் என்ற மாநிலத்திலுள்ள சியோன் பகுதி காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் அவசர அழைப்பு வந்திருக்கிறது. எனவே, சம்பவயிடத்திற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். அங்கு ஒரு வீட்டில் முதிய தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

அவர்களின் சடலத்திற்கு அருகில் ஒரு ஆயுதம் கிடந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, இச்சம்பவம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது, விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் தெரியவரும் என்று கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |