Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “எதிர்பார்த்த விஷயங்கள் பூர்த்தியாகும்”… அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்”..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்துமே பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். சொன்ன சொல்லையும் நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். இன்று தேவையற்ற சிந்தனை மட்டும் மனதில் உருவாகக்கூடும். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள். உடன்பிறந்தவர்களினால் உதவிகள் இன்று கிடைக்கும்.

இன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளிடம்  அன்பாக பழகுவது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடைக்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள கடும் பாடுபடுவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும்.

படிப்பில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுதும் முக்கியமான காரியங்களை  மேற்கொள்ளும் போதும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |