பிரபுசாலமன் இயக்கத்தில் அஸ்வின் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சமையல் சார்ந்த நிகழ்ச்சி தான் ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். அந்தவகையில், அஸ்வினும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
இதனையடுத்து, இவருக்கு படவாய்ப்புகளும் தேடி வர ஆரம்பித்துள்ளது. அதன்படி, புதுமுக இயக்குனரான ஹரிஹரன் இயக்கத்தில் இவர் ”என்ன சொல்லப் போகிறாய்” என்ற படத்தில் முதன்முதலாக நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.