Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திரும்பவும் உறுதி செய்ய வேண்டும்…. கட்சியினர் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இருக்கும் கிருஷ்ணகிரி ஈரோட்டில் தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்ததை கண்டித்தும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஏ.டி‌.கே ராஜா தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் வணிகர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யாத உயர்நீதிமன்றம் உடனடியாக இட ஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பி உள்ளனர். இதனையடுத்து மாநில துணை தலைவர் பொன்னுசாமி உள்பட அதிகமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் போராட்டத்தின் இறுதியில் நகரச் செயலாளரான சிவா நன்றி கூறியுள்ளார்.

Categories

Tech |