முன்விரோதத்தால் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் அவரது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் சங்கர்குரு, முனியசாமி, பிரகாஷ் ஆகிய 3 பேருடன் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று அவரை அழைத்தனர்.
ஆனால் கார்த்திகேயன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திகேயனின் வீட்டின் வெளியே பெட்ரோல் குண்டு வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து கார்த்திகேயன் அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய 4 போரையும் கைது செய்துள்ளனர்.