Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் ….! டெல்லி மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த 24 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில்  இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனிடையே அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு ஆன்லைன் மூலமாக மர்ம நபர் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார் .இது குறித்து தகவலறிந்த டெல்லி மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது .

இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மகளிர் ஆணையம் மிரட்டல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட விபரம், எஃப்ஐஆர் நகல் மற்றும் கைது செய்யப்பட்ட விவரம் தொடர்பாக வருகின்ற 8-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறும்போது,” ட்விட்டரில் 9 மாத பெண் குழந்தைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது அவமானத்துகுரியது. இந்த வழக்கு குறித்து அனைத்து விவரங்களை அளிக்கும் படி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளோம்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |