கடகம் ராசி அன்பர்களே..!! உங்களின் யதார்த்த பேச்சு சிலர் மனதை சங்கட படுத்தலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியமாகும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவை கொடுக்கலாம். அளவான பணவரவு இன்று கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஏற்படும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். வேலை சுமை கொஞ்சம் கூடும். நீண்டநாள் குழப்பங்கள் ஒருவழியாக முடிவுக்கு வரக்கூடும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்