வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு தொடர்ந்து பல கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக நீதி நிலைக்க வேண்டுமென்றால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணா கூறியுள்ளார். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க கோரி மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.