மின்சாரம் பாய்ந்து கிளீனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியில் லாரி கிளீனரான மதுபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனரான கருப்பையா உடன் கண்டெய்னர் லாரியில் மணலி புதுநகருக்கு சென்றுள்ளார். அப்போது டீசல் தீர்ந்து போனதால் மற்றொரு லாரியில் லிப்ட் கேட்டு மதுபாலன் நாப்பாளையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் லாரி விச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் பெட்டி பக்கவாட்டில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசி விட்டது. இதனால் லாரியின் இடதுபுறம் அமர்ந்திருந்த மதுபாலன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மதுபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுபாலனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரான சதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.