காட்டெருமைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் சாலையில் கூட்டமாக நிற்கிறது. அதிலும் சில காட்டெருமைகள் சாலையில் நின்றுகுட்டிகளுக்கு பாலூட்டி கொண்டிருக்கிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது இரவு நேரத்தில் குட்டிகளுடன் காட்டெருமைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனை அடுத்து ஒலி எழுப்பி வன விலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது. அதனையும் மீறி வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.