கன்னி ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதரர் வழியில் ஒற்றுமை இருக்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.
லாபம் கூடும். சில நேரங்களில் சோர்வுடன் காணப்படுவார்கள். பழைய மனையை நல்ல விலைக்கு விற்பீர்கள். ரத்த சொந்தங்கள் வழிய வந்து உதவி செய்வார்கள். இன்று மனம் மகிழ்வாகவே காணப்படும். மாணவர்கள் மட்டும் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். அது மட்டுமில்லாமல் பாடத்தில் இன்று கவனத்தை செலுத்துங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான வேலை செய்யும்பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிவபெருமான் வழிபாடு உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி அமைத்துக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்