Categories
உலக செய்திகள்

கிளாஸ்கோவில் நடைபெறும் உச்சி மாநாடு…. மைக்ரோசாப்ட் நிறுவனரை சந்தித்த மோடி…. நீண்ட நேர ஆலோசனை….!!

காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கு நடுவில் பிரதமர் மோடி மைக்ரோசாப்ட் நிறுவனரை சந்தித்து பேசியுள்ளார்

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஐ.நாவின் சார்பாக நடத்தப்படும் COP26 என்ற காலநிலை மாற்ற உச்சி மாநாடானது  நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனா தொற்று  நெருக்கடிக்கு மத்தியிலும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் போன்ற 120 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் இந்தியா பிரதமர் மோடியும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் மாநாட்டிற்கு இடையே உலகத் தலைவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸை இந்திய பிரதமர் மோடி சந்தித்து உரையாடியுள்ளார். அதில் முக்கியமாக நிலைத்த வளர்ச்சிக்கான வழிகள் மற்றும் காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Categories

Tech |