Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விமுறைகள் மீறல்” 19 ஆம்னி பஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தொடர்பாக 19 ஆம்னி பேருந்துகளுக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள குறிஞ்சிநகர் சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், தரணிதர், ராஜ்குமார் போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 19 வெளிமாநில ஆம்னி பேருந்துகளை அவர்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கேட்டறிந்தனர். மேலும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறி அதிக முகப்பு விளக்குகள் பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் உபயோகப்படுத்தியது வாகன ஆய்வாளர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து 19 ஆம்னி பேருந்துகளுக்கும் சேர்த்து மொத்தம் 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. அதன்பின் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் விடுவித்தனர்.

Categories

Tech |