கடைக்குள் புகுந்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் பாஷா என்பவர் வசித்து வருகின்றார். இவர் காவல் நிலையம் முன்பு பிஸ்கட், மிட்டாய் கடை வைத்துள்ளார். இந்நிலையில் தனது மகனை கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பாஷா வீட்டிற்கு சென்றார்.
அப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர் பிஸ்கட் வாங்குவது போல் நடித்து அங்கு இருந்த சிறுவனை ஏமாற்றி கல்லாவில் இருந்த 8 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார். இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.