செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ், தமிழக அரசு 10.5 % இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்முறையீடு செல்லக்கூடாது என்பது என்னுடைய கோரிக்கை. ஏனென்றால், சமூகநீதியை போற்றுகின்ற மற்றும் காக்கக்கூடிய அரசு என்று சொல்லக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு, அனைத்து சமுதாய மக்களுக்கான சமூக நீதியை காக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் அவசர காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அவசர சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் நல்ல நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கக் கூடிய நேரத்தில் நாங்களும் கேவியட் மனுதாக்கல் செய்து இருக்கிறோம்.எனவே தமிழக அரசு மேல்முறை செல்லக்கூடாது என்பது அனைத்து சமுதாய மக்களின் சார்பாக வைக்கக்கூடிய கோரிக்கை.
அம்மாவின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு முழுக்க முழுக்க அனைத்து சமுதாய மக்களுக்கும் அரசாக இருந்தது. ஆனால் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான ஒரு அரசாக மாறி விட்டது. அவசர கோலத்தில் தான் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் மீண்டும் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்கின்ற பதவி ஆசையில் தான் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு மட்டும் ஓட்டுக்காக வாக்கு வங்கிக்காக மற்ற மக்களை வஞ்சித்து அந்த அவசர சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் அதற்கு தக்க பதிலடி நீதிமன்றம் வழங்கியிருப்பதாக தான் நாங்கள் கருதுகிறோம்.
ஒட்டுமொத்தமாக எல்லா சமுதாய மக்களுக்குமான அரசாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக இந்த அரசு மேல்முறையீடு செய்யாது என்று நாங்கள் நம்புகிறோம். சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு இந்த விஷயத்தில் சமூகநீதிக்கு உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கக்கூடிய தருணத்தில் இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான ஒரு அரசாக இந்த அரசு மாறிவிடக் கூடாது என்பதுதான் எங்களைப்போன்ற நடுநிலையாளர்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.