காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்ற ஒரு மிக முக்கியமான உத்தரவை தற்போது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய போது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் தமிழக காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமை காவலர் வரையிலான அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.