தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இன்று மட்டும் காலை முதல் கனமழை பெய்து வரும் 20 மாவட்டங்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 6 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், அரியலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கேரள கடலோர பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.