சிலி நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் லாஸ் அண்டீஸ் நகரில் இன்று திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் லாஸ் அண்டீஸ் நகரில் இருந்து மேற்கே 35 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக அதிர்ந்தன. இதனால், தூங்கி கொண்டிருந்த மக்கள் அனைவரும் அலறியடித்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதுவரை, இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியது. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் சிலி நாட்டின் உள்துறை மந்திரி தகவல் தெரிவித்தார்.