கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் 800 பேரை ஏர்கனடா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், விமானத்தில் பயணிகள் பயணிக்க கொரோனா தடுப்பூசி கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பணிக்கு வரும் விமான ஊழியர்கள் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களும் அறிவித்தன.
அந்த வகையில், கனடாவிலும் ஏர்கனடா விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமான ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், ஏர்கனடா விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 800-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசி போடவில்லை.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடாத 800-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏர்கனடா நிறுவனம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்திய பின்னரே பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் ஏர்கனடா அறிவித்துள்ளது.