Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு வர மறுத்த மனைவி… கணவனின் கொடூர செயல்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அணிகுருந்தான் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அபிநயாவிற்கு திருமணம் முடிந்து பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த 6 மாத காலமாக தனது மகள் வீட்டிலேயே வசித்து அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனைதொடர்ந்து முருகானந்தம் பூங்கோதையை வீட்டிற்கு அழைத்த நிலையில் அவர் வீட்டிற்கு வர மறுத்துள்ளார். இதனால் பூங்கோதை மீது முருகானந்தத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பூங்கோதை வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போ அவரை வழிமறித்து முருகானந்தம் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பூங்கோதை சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எமனேஸ்வரம் காவல்துறையினர் பூங்கோதையின் உடலை மீட்டு உடற்கூராவிற்க்காக பரமகுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முருகானந்தம் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |