மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் GMB புரொடக்சன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
April 1st 2022!! 😊#HappyDiwali @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @MythriOfficial @GMBents @14ReelsPlus #SarkaruVaariPaata pic.twitter.com/fw83zwDC7T
— Mahesh Babu (@urstrulyMahesh) November 3, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு தெலுங்கில் 3 பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.