தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. அதனை சரிக்கட்டி தேர்தலை சந்தித்த ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையினான அதிமுக உட்கட்சி சசலப்புகளோடு தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபோட்டி தொடங்கிய நிலையில் சிறையில் இருந்து வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற முடிவு செய்து அதற்கான வேலையை செய்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தகவல் வெளியாகி தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. அதில் அதிமுக கேம்பில் தற்போது மயான அமைதி நிலவுகிறது ‘புயலுக்கு முன் அமைதி’ என்பார்களே அப்படி ஒரு அமைதி நிலவுகிறது. என்கின்றனர். விவரம் தெரிந்தவர்கள். பொங்கலுக்குள் அதிமுகமகாவை கைப்பற்றும் முடிவோடு சசிகலா தரப்பு வேலையை செய்து வருகிறதாம். ஈபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளோர், ஓரங்கட்டபட்டவர்கள் என பெரும் லிஸ்ட் தயாராகி வருகிறதாம். இந்த அசைன்மென்ட் நடராஜன் சகோதரர் எம்.ராஜேந்திரன் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.