Categories
உலக செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு…. தீப்பற்றி எரிந்த கடை…. பிரபல நாட்டில் வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தீப்பற்றி எரியும் கடையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் உணவு பொருட்கள் விற்கும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் உள்ளே ஜோ மங்கல் என்ற நபர் திடீரென பெட்ரோல் குண்டை தூக்கி வீசினார். இதில் அந்த கடையின் ஒரு பகுதியில் தீ அதிவேகமாக பற்றி ஏறிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியின் அருகே நின்று கொண்டிருந்த நபரின் காலணியிலும் தீப்பற்றி எரிந்தது. இந்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மற்றொரு பெட்ரோல் குண்டையும் ஜோ வீச முயன்றபோது அருகில் நின்ற நபர் தட்டிவிட்டதால் பெரியளவில் ஏற்படவிருந்த தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கடைக்குள் பற்றி எறிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |