Categories
தேசிய செய்திகள்

எங்கள் கட்சிக்கு வாங்க மோடி – பிரதமருக்கு அழைப்பு …!!

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக கட்சி அசுர வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. பிரதமர் மோடி 2ஆவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டு நாட்டை வெற்றிகரமாக வழி நடத்தி, உலகளவில் இந்தியாவை தலைநிமிர செய்து, பல உலக நாட்டு தலைவர்களின் பாராட்டை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டு பிரதமர் நப்தலி பென்னெட் பிரதமர் மோடியை தனது கட்சியில் சேர சொல்லி கைகுலுக்கி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் மனம் விட்டு சிரித்தனர். அதன்பிறகு பேசிய இஸ்ரேல் நாட்டு பிரதமர், நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமானவர் என்றும், இந்திய நாகரீகங்களிடையேயான ஆழமான உறவை மீண்டும் தொடங்கியவர். மேலும் இந்த முன்னெடுப்பை உங்கள் இதயத்தில் இருந்து வந்தது” என்று மோடியிடம் அவர் கூறினார்.

Categories

Tech |