7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது .
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்ராகுல் களமிறங்கியுள்ளனர்.இதில் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர் .இதில் கே.எல்.ராகுல்37 பந்துகளில் 54 ரன்னும் , ரோகித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர் .இதனால் இந்திய அணி 12 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் குவித்துள்ளது.