பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள அணைக்கரப்பட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்பகை காரணமாக நல்லதம்பி தனது உறவினரை முருகனை அரிவாளால் தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் நல்லதம்பி மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் நல்லதம்பி மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே நல்லதம்பியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் நல்லதம்பியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நல்லதம்பி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.