நெல்லை மாவட்டத்தில் 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குமரி கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் அறிவித்திருந்தார்.
அதன்படி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் கூட்டப்புளி, கூடுதாழை உள்ளிட்ட நெல்லை மாவட்டத்திலுள்ள 9 மீனவ கிராமத்தில் வசிக்கும் 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.