Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சாலை…. சீரமைக்கும் பணியில் அதிகாரிகள்…. தலைவரின் உத்தரவு….!!

சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சோளிங்கர் அருகாமையில் கொடைக்கல் பகுதியிலிருந்து தலைவாய் பேட்டை கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை ஓரங்களில் இருக்கும் தடுப்பணை கால்வாய்களில் அதிக அளவில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெள்ளிமேடு உள்பட 6 கிராமங்களை இணைக்க கூடிய தார் சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு 8 அடி அளவிற்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி தகவல் அறிந்த ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அதற்குப் பிறகு 100-க்கும் அதிகமான மணல் மூட்டைகளை கொண்டு சாலையை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் மணல் மூட்டைகளை கொண்டு சாலையைப் பயன்படுத்தும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |