Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு வாய்ப்பு இருக்கு…. 95 நபர்கள் தேர்ச்சி…. அதிகாரியின் தகவல்….!!

நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற 95 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். அதன்பின் இம்மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் 451 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். இவர்களில் 87 மாணவர்கள் மற்றும் 370 மாணவிகள் இருக்கின்றனர். இதனையடுத்து தேர்வு முடிவுகள் இரவு நேரத்தில் வெளியிடப்பட்டதினால் அதை மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் தேர்வு எழுதிய மாணவர்கள் உடனடியாக தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இம்மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 457 மாணவர்களில் 95 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதில் 14 மாணவர்கள் மற்றும் 81 மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மேலும் அரசு பள்ளிகளில் மட்டுமே படித்து தேர்ச்சி பெற்ற 50 நபர்களுக்கு தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |